பெரம்பலூரில் செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பட்டயபயிற்சி சேர்க்கை

 

பெரம்பலூர், ஏப்.26: பெரம்பலூரில் செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை துணைப்பயிற்சி நிலையத்தில் 2024- 2025-க்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி சேர்க்கை வருகிற 29ம் தேதி துவங்குகிறது. தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் துணைப்பயிற்சி நிலையம் பெரம்பலூர் (நேஷனல் ITI கல்லூரி வளாகம் 3 ரோடு துறைமங்கலம்) 2024-2025 ஆம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சியில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான முன்பதிவு 29.04.2024 தேதி முதல் துவங்கப்படவுள்ளது.

பயிற்சி 2024-செப்டம்பரில் துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெறும். பயிற்சி காலம் ஓராண்டு இரு பருவமுறைகளில், பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழ் வழியில் மட்டுமே நடத்தப்படும். விண்ணப்பத்திற்கான தேதி மற்றும் பயிற்சி கட்டண விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் +2 தேர்ச்சியும் 17 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

பயிற்சியில் சேருவதற்கான நிபந்தனைகள் மற்றும் விவரங்கள் www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும். பயிற்சியில் மாணவர்கள் சேர்வதற்கு மேற்காணும் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும் என்ற தகவலை பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு பயிற்சி நிலையத்தின் dcmlalgudi@gmail.com என்ற மின்னஞ்சலையும், 9489955214 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்