பெரம்பலூரில் ஓடும் பஸ்சில் சர்க்கரை ஆலை அலுவலரிடம் 12 பவுன் நகைகள் திருட்டு

 

பெரம்பலூர்,ஜன.26: பெரம்பலூரில் ஓடும் பஸ்சில் சர்க்கரை ஆலை அலுவலரிடம் 12 பவுன் நகைகளை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம், தாலையாட்டி சித்தர் கோவில் அருகே வசிப்பவர் அசோகர். இவரது மனைவி சாந்தி(59). இவர் எறையூர் பொதுத் துறை சர்க்கரை ஆலையில் கரும்பு அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் மதுரை. இந்நிலையில் பெரம்பலூரில் தனியாக வசித்து வரும் அவர் நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்வதற்காக 12 பவுன் நகைகளை ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொண்டு கடந்த 24ம் தேதி இரவு 8 மணியளவில் புறப்பட்டார்.

பெரம்பலூர் புதியபேருந்து நிலையத்தில் TN 32 N 4530 என்ற பேருந்தில் சென்றார். சிறுவாச்சூர் அருகே சென்றபோது டிக்கெட் எடுக்க ஹேண்ட்பேக்கை பார்த்த போது அதில் இருந்த 3 பவுன் வளையல்கள், 3பவுன் நெக்லஸ், 1 பவுன் செயின் 2, ருத்ராட்சம் 1 பவுன், 3 பவுன் எடையுள்ள 7 செட் தோடு என சுமார் 6 லட்சம் மதிப்பிலான 12 பவுன் நகைகளை காணவில்லை. இதனால் அதிர் ச்சியடைந்த சாந்தி பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து நகைகளை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்