பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது

 

ஜெயங்கொண்டம், ஏப்.24:ஜெயங்கொண்டம் அருகில் உள்ள மருக்காளங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகள் தமிழரசி (45). குடும்பத்துடன் விவசாய கூலி வேலை செய்து வருவதாகவும் இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் மருக்காலங்குறிச்சி ஊரில் கோயில் திருவிழாவின் போது கரகாட்ட நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது அதனை பார்க்க வந்த உடையார்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்த குமார் மகன் தனுஷ் (22) முருகேசன் மகன் கலைமணி (20) ஆகிய இருவரும் தமிழரசியின் வீட்டின் முன்பு தகராறு செய்தும் வீட்டின் முன்பு இருந்த பிளாஸ்டிக் சேரை உடைத்தும் தமிழரசியை அசிங்கமாக திட்டி குச்சியால் அடித்தும் மிரட்டி சென்றனர். தமிழரசி ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்.

 

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்