பெண்ணுடன் காரில் தனிமையில் இருந்த ஏட்டுவை கீழே இழுத்து கணவர், உறவினர்கள் சரமாரி தாக்குதல்: பாளை மருத்துவமனையில் பரபரப்பு சமூகவலைத்தளத்தில் வீடியோ வைரல்

நெல்லை: நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானைச் சேர்ந்த 37 வயது பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். ஒருவர் கல்லூரியிலும் மற்றொருவர் பள்ளியிலும் படித்து வருகின்றனர். அந்தபெண்ணும், கணவரும் குடும்ப தகராறு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர். அந்தபெண் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது தாய் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது உடன் இருந்த பெண்ணுக்கு அங்குள்ள புறக்காவல் நிலைய ஏட்டு முருகன் மருந்து, மாத்திரைகள், டிபன், டீ வாங்கி கொடுப்பது ஆகிய உதவிகளை செய்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனிடையே பெண்ணின் தாய் உடல் நலம் தேறி வீட்டிற்கு சென்று விட்டார்.இரு வாரங்களுக்கு ஒரு முறை மாத்திரை வாங்குவதை சாக்காக வைத்து அந்த பெண், மருத்துவமனைக்கு வந்து சென்றார். இந்நிலையில் நேற்று முருகன் புறக்காவல் நிலையத்தில் பணியில் இருப்பதை செல்போன் மூலம் தெரிந்து ெகாண்ட பெண் அவரை சந்தித்தார். பின்னர் முருகன் தனது காரின் முன் சீட்டில் அந்த பெண்ணுடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்தார்.இவர்களின் நடவடிக்கையை கடந்த சில வாரங்களாக சந்தேகித்த பெண்ணின் கணவரும், அவரது உறவினர்களும் நேற்று அவர்களை கையும் களவுமாக பிடிப்பதற்காக மறைவான இடத்தில் இருந்தவாறு கண்காணித்துள்ளனர். காரில் இருவரும் தனிமையில் இருந்ததை பார்த்ததும் ஆத்திரமடைந்த கணவரும், அவரது உறவினர்களும் காரிலிருந்து இருவரையும் வெளியே இழுத்து போட்டனர். ஏட்டு முருகன் மற்றும் அந்த பெண்ணை பொதுமக்கள் மத்தியில் ஓட, ஓட விரட்டி சரமாரியாக தாக்கினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.இதில் காயமடைந்த ஏட்டு முருகன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐகிரவுண்ட் காவல் நிலையத்தில் அந்த பெண், தன்னை கணவரும் உறவினர்களும் தாக்கி விட்டதாக புகார் அளித்தார். இதுகுறித்து பாளை போலீஸ் உதவி கமிஷனர் பாலசந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்….

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராயபுரம் சிவசங்கரின் உடல் காசிமேடு மயானத்தில் தகனம்: குடும்பத்தினருக்கு ரூ5 லட்சம் உதவி