பெண்ணின் காலை ஒடித்த இருவருக்கு 5 ஆண்டு சிறை

 

பாலக்காடு,மே20: பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி பாறைகுன்று கயரம்காட்டை சேர்ந்தவர் பார்வதி. இவருக்கு ரஞ்ஜித்,சஞ்ஜெய் என 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2018ம்ஆண்டு மே12ம்தேதி பார்வதியின் மகன் ரஞ்ஜித் பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது பைக் மோதியது. இதுதொடர்பாக பார்வதியின் மகன்களான ரஞ்ஜித்,சஞ்ஜெய் ஆகியோர் அந்த பெண்ணிடம் சமரச பேச்சு நடத்த அவரது வீட்டிற்கு சென்ற போது, விபத்தில் சிக்கிய பெண்ணிண் உறவினர்களான ஹக்கீம், ஜாபர் ஆகியோர் இரும்பு கம்பியால் தாய் மற்றும் மகன்களை தாக்கி காயப்படுத்தினர்.

இந்த தாக்குதலில் பார்வதியின் கால் முறிந்து சில மாதங்கள் மாவு கட்டு போட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதே போல ரஞ்ஜித், சஞ்ஜெய் ஆகியோரும் காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்தனர். இதுகுறித்து பார்வதி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதியப்பட்டது. இந்த வழக்கு மன்னார்க்காடு பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலவையில் இருந்து வந்தன. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி ரதீஷகுமார் நேற்று ஹக்கீம், ஜாபர் ஆகியோருக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.6.2 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Related posts

உரம் பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ்

திருச்சுழி-உடையானம்பட்டி இடையே குண்டாறு குறுக்கே உயர்மட்ட பாலம்: கட்டுமான பணிகள் விறுவிறுப்பு

பெண் அடித்து கொலை? கண்மாயில் உடல் மீட்பு