பூந்தமல்லி அருகே பறக்கும் படை சோதனையில் ₹4 லட்சத்து 65 ஆயிரம் பணம் பறிமுதல்

பூந்தமல்லி, மார்ச் 28: பூந்தமல்லி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ₹4 லட்சத்து 65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு உரிய ஆவணங்களின்றி பொதுமக்கள் கொண்டு செல்லும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி, தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி அடுத்த கீழ்மனம்பேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ₹3 லட்சத்து 75 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல், கோலப்பன்சேரி பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ₹90 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் ₹4 லட்சத்து 65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Related posts

காட்பாடியில் 3 மாதங்களாக சிறுமியை மிரட்டி சிறுவன் சில்மிஷம் போக்சோ வழக்குப்பதிவு

காட்பாடியில் துணிகரம் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 8 சவரன் திருட்டு

அதிமுக தொண்டர்கள் அனைவரும் விரைவில் ஒன்றிணைந்து வருவார்கள் வேலூரில் டிவிவி தினகரன் பேட்டி