புளி சீசன் களை கட்டியது

வேப்பனஹள்ளி, பிப்.9: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புளிய மரங்கள் பரவலாக உள்ளன. தற்போது, புளி சீசன் களை கட்டியுள்ளது. மரங்களில் நன்கு பழுத்த பழங்களை சேகரித்து களத்திற்கு கொண்டு வந்து மொத்தமாக குவிக்கின்றனர். பின்னர், வெயிலில் உலர விட்டு, ஓடு நீக்கி சுத்தப்டுத்தி மார்க்கெட்டிற்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி ஏல மார்கெட்டில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் தமிழகம் மட்டுமின்றி வட நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் புளியை விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை சேலம் லீ பஜார், செவ்வாய்பேட்டை மார்க்கெட்டிற்கும், வெளி மாநிலங்களை பொறுத்தவரை மும்பைக்கும் அதிகளவில் புளி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சில்லரையில் விநியோகம் செய்யப்படுகிறது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்