புதுச்சேரி நீதிமன்றத்தில் கட்டாய முகக்கவசம் அமல்

புதுச்சேரி, ஏப். 12: புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, புதுவை சட்டசபயைில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களை பார்க்க வரும் அதிகாரிகள், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள், காவலர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல், புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என புதுவை வக்கீல் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தலைமை நீதிமன்றத்தில் 18 நீதிமன்றங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளுக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் தொற்று பரவலை தடுக்கவும், அரசின் உத்தரவை அமல்படுத்தும் வகையிலும், நீதிமன்றத்திற்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதையடுத்து நேற்று புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீதிபதிகள் முகக்கவசம் வழங்கினர்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது