புதிய ஆளுநரை திரும்பப்பெற திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து, திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘புதிய ஆளுநர் அறிவிப்பில் காங்கிரஸ் கட்சியின் சந்தேகம் புறந்தள்ளக்கூடியது இல்லை. அவர் உளவுத்துறையில் அதிகாரியாக பணியாற்றியவர். திட்டமிட்டே அவரை நாகலாந்தில் இருந்து தமிழகத்திற்கு மாற்றி இருக்கிறார்கள். புதிய ஆளுநரை திரும்பப்பெற வேண்டும். ஜனநாயக பூர்வமாக செயல்படக்கூடிய ஒருவரை நியமிக்க வேண்டும்’’ என்றார்.ஜி.ராமகிருஷ்ணன்: திரிபுராவில் பாஜ, ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பினர் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடியதை கண்டித்து குறளகம்  அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன போராட்டம்  நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்  பங்கேற்றார். பின் அவர் பேட்டியளிக்கையில், ‘‘பாஜ அல்லாத மாநிலங்களை  சீர்குலைக்கவே புதிய ஆளுநர்களை பாஜ நியமித்து வருகிறது’’ என்றார்….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்