பிரையண்ட் பூங்காவில் பூத்து குலுங்கும் அபூர்வ மலர்கள் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பு

கொடைக்கானல், ஏப். 17: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சொர்க்கத்தின் பறவை (பேர்ட் ஆப் பாரடைஸ்) பூக்கள் பூத்துள்ளன. இதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தொடர் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இதன் காரணமாக கொடைக்கானல் ஏரி சாலை, பிரையன்ட் பூங்கா சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தற்போது பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன. அசேலியா மலர்கள், மஞ்சள் கலரில் பாப்பி மலர்கள், அஷ்டமரியா மலர்கள் அதிகளவில் பூக்க தொடங்கியுள்ளன. அபூர்வ வகையைச் சேர்ந்த பேர்ட் ஆப் பாரடைஸ் என அழைக்கப்படும் சொர்க்கத்தின் பறவை பூக்கள் அழகாக பூத்து குலுங்குகின்றன. இவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

Related posts

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது