பிரபல ரவுடி கைது

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வரும் சங்கரநாராயணன் (21), நேற்று முன்தினம் கோயம்பேடு காளியம்மன் கோயில் தெரு வழியாக சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர், கத்தி முனையில் மிரட்டி, இவரது செல்போன் மற்றும் வாட்ச்சை  பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில், கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அதில், மதுரவாயல் வேல் நகரை சேர்ந்த பிரபல ரவுடி விஜய் (23) என்பவர் சங்கரநாராயணனிடம் செல்போன், வாட்ச்சை பறித்து சென்றதும் தெரிந்தது. இவர் மீது கோயம்பேடு, மதுரவாயல், விருகம்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி, கொள்ளை மற்றும் செல்போன் பறிப்பு என 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்….

Related posts

நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரி இருபாலர் கல்லூரியாக மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

புளியந்தோப்பு பகுதியில் மெட்ரோ ரயில் பணி இன்று முதல் 17ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் அறிவிப்பு