பிரதமரின் வீடுகளில் சூரிய சக்தி மின் திட்டத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு

கோவை, பிப்.29: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கோவை தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட பிரிவு அலுவலகங்களில், வீடுகளின் மேற்கூரையில் சூரிய தகடுகள் பொருத்தி மின் உற்பத்தி செய்யும் வீடுகளுக்கான பிரதம மந்திரியின் சூரிய சக்தி மின் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதன்படி, registration.pmsuryaghar.gov.in, www.pmsuryaghar.gov.in, www.solarrooftop.gov.in மற்றும் PM-suryaghar ஆப் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்களும் மின் கட்டண ரசீது மட்டுமே பதிவேற்றம் செய்து இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் மூலம் மானியமாக 1 கிலோ வாட் ரூ.30 ஆயிரம், 2 கிலோ வாட் ரூ.60 ஆயிரம், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறனுக்கு ரூ.78,000 வழங்கப்படுகிறது. மானிய தொகை பணிகள் முடிந்த 7 முதல் 30 நாட்களில் நுகர்வோரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும், இந்த சூரிய மின் தகடு பொருத்துவதால் இருமாதங்களுக்கு 300 யூனிட் பயன்படுத்துவோர் ரூ.675-க்கு பதில் ரூ.87 செலுத்தும் வகையில் கட்டணம் மாறுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை கோவை தெற்கு வட்டத்தை சேர்ந்த குனியமுத்தூர், சோமனூர், நெகமம் கோட்ட நுகர்வோர்கள் சேர்ந்து பயனடைய மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், திட்டத்தில் சேருவதற்கு உதவிமின் பொறியாளரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி