பிரசித்தி பெற்ற 10 கோயில் பிரசாதங்கள் ஒரே இடத்தில் விற்பனை திருவண்ணாமலையில் பக்தர்கள் வரவேற்பு இந்து சமய அறநிலையத்துறை சார்பில்

திருவண்ணாமலை, மே 6: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற 10 திருக்கோயில் பிரசாதங்கள் ஒரே இடத்தில் விற்பனை செய்தது, பக்தர்களிடையே வரவேற்பை பெற்றது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பவுர்ணமி மற்றும் விஷேச நாட்களில், தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற 10 கோயில்களின் பிரசாதங்கள் விற்பனை செய்யப்படும் என கடந்த மாதம் சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்ைகயில் அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து, சித்ரா பவுர்ணமி கிரிவலத்தில், பிரசாத விற்பனை முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதையொட்டி, கிரிவலப்பாதையில் நேற்று அறநிலையத்துறை சார்பில் புகழ்பெற்ற 10 திருக்கோயில்களின் பிரசாத விற்பனை மையம் 3 இடங்களில் அமைக்கப்பட்டது.

அதில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மிளகு வடை மற்றும் அதிரசம், பழனி தண்டாயுதபாணி கோயில் பஞ்சாமிர்தம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் கோடி தீர்த்தம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் அதிரசம், சமயபுரம் மாரியம்மன் கோயில் குங்குமம், பண்ணாரி அம்மன் கோயில் ராகி லட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமம், அழகர் கோயில் கள்ளழகர் ேகாயில் சம்பா தோசை, சுவாமி மலை சுவாமிநாத சுவாமி கோயில் தினை மாவு, ரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் அதிரசம், தேன்குழல் ஆகியவை தனித்தனி விலையில் விற்பனை செய்யப்பட்டது. தங்களுக்கு விருப்பமான கோயில் பிரசாதங்களை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். ஒட்டு மொத்தமாக வழங்காமல், தனித்தனி விலையில் பிரசாதங்கள் விற்பனை செய்தது பயனுள்ளதாக இருந்தது. மேலும், விலையும் அந்தந்த கோயிலின் வழக்கமான விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒவ்வொரு பவுர்ணமி கிரிவலத்தின்போதும், பிரசாதம் விற்பனை செய்யப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்