பாலமேடு பகுதியில் ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை, கூடுதல் வகுப்பறை கட்டிட பணி துவக்கம்

அலங்காநல்லூர், நவ. 21: மதுரை பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி முதல் உசிலம்பட்டி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் ரூ.2 கோடியே 25 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் புதிய தார் சாலை, முடுவார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு தளங்கள் கொண்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜைகள் நடைபெற்றன. சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் தலைமை வகித்து புதிய தார் சாலை, வகுப்பறை கட்டிட பணிகளை அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவை தலைவர் பாலசுப்ரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆதிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, துணை தலைவர் சங்கீதா மணிமாறன், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், சுமதி பாண்டியராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயமணி, ஜெயமாலா பாலமுருகன், நகர் செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், ஒன்றிய பொருளாளர் சுந்தர், விளையாட்டு மேம்பாட்டு அணி பிரதாப், அணி அமைப்பாளர்கள் சந்தன கருப்பு, யோகேஷ், தவசதீஷ், ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்