பாலமேடு அருகே காவேரியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா

 

அலங்காநல்லூர், மே 5: பாலமேடு அருகே ராஜக்காள்பட்டியில் உள்ள காவேரியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று திருவிழா நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து முத்தாலம்மன் கோயிலில் இருந்து பழத்தட்டுகளுடன் பெண்கள் ஊர்வலமாக காவேரியம்மன் கோயிலுக்கு வந்தனர்.

பின்னர் அம்மனுக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து அழகுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காவேரியம்மன் கோவில் பங்காளிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related posts

புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் அனைத்திலும் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் திட்டம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது: அதிகாரிகள் தகவல்

ஷேர் மார்க்கெட்டில் இரட்டிப்பு லாபம் என போலீஸ்காரரிடம் பணம் பறிப்பு: மோசடி நபர்களுக்கு வலை

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற 3 நாட்களில் 2300 பேர் விண்ணப்பம்: மாநகராட்சி தகவல்