பாலக்காடு-நெல்லியாம்பதி வழிப்பாதையில் அரசு பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை

 

பாலக்காடு, மே 10: பாலக்காடு – நெல்லியாம்பதி வழிப்பாதையில் இயங்கி வந்த கேரள அரசு பேருந்தை மீண்டும் இயக்கவேண்டும் என ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கேரளா மாநிலம், பாலக்காட்டில் இருந்து நெம்மாரா – போத்துண்டி வழியாக நெல்லியாம்பதிக்கு 4 கேரள அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது ஒரு அரசு பேருந்து இயங்குவதில்லை. பாலக்காடு-நெல்லியாம்பதி காரப்பாறை, பாலக்காடு-நெல்லியாம்பதி விக்டோரியா, பாலக்காடு-நெல்லியாம்பதி லில்லி ஆகிய பகுதிகளுக்கு 3 பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்த 3 பேருந்துகளும் ஒரு மணி நேரம் இடைவெளி விட்டு நெல்லியாம்பதிக்கு வந்து செல்கின்றன.

இதனால் டீ, காப்பி எஸ்டேட் தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாலக்காட்டில் இருந்து காலை 8.30 க்கு புறப்படும் அரசு பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், நெல்லியாம்பதி-திருச்சூர், நெல்லியாம்பதி-பொள்ளாச்சி ஆகிய வழித்தடங்களில் இயங்கிய பேருந்துகளும் தற்போது இயங்காமல் உள்ளது. இந்த பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். நெல்லியாம்பதியில் நடைபெற்ற கூட்டத்தில் செயலாளர் பிரசாத் தலைமை தாங்கினார். சலீம், பிரான்சிஸ், சுரேஷ்குமார் உட்பட தோட்ட தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.

Related posts

செங்காட்டுபட்டியில் விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம்

உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயிலில் 21ம் தேதி வைகாசி விசாக தேரோட்டம்

மணப்பாறை அருகே குடும்ப தகராறில் பயங்கரம் மனைவி உள்பட 3 பேரை கத்தியால் குத்தியவர் கைது