பாலக்காடு அருகே காபி தோட்டத்தில் காட்டுயானை பலி

 

பாலக்காடு, நவ.11: பாலக்காடு மாவட்டம் நெம்மாராவை அடுத்த நெல்லியாம்பதி காரப்பாறையில் உள்ள தனியார் காபி தோட்டத்தில் காட்டுயானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதனை கண்ட தோட்ட தொழிலாளர், நெல்லியாம்பதி வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நெல்லியாம்பதி ரேஞ்சு அதிகாரி பிரமோத், துணை ரேஞ்சு அதிகாரி ஜெயந்திரன், பறக்கும்படை பீட் பாரஸ்ட் அதிகாரி ஷினின், திருச்சூர் வனத்துறை சீனியர் கால்நடை மருத்துவர் விபின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையின் சடலத்தை ஆய்வு மேற்கொண்டனர்.

நெல்லியாம்பதி வனப்பகுதி காரப்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாக தனியாக அலைந்து திரிந்த பெண் காட்டுயானை சுமார் 45 வயதுடையது. வயது முதிர்வாலும், உடல்நலகுறைவாலும் யானை உயிரிழந்துள்ளது என ஆய்வில் தெரியவந்தது. இதனையடுத்து கால்நடை டாக்டர் சடலத்தை உடற்கூறு பரிசோதனைக்குப்பின் காட்டுப்பகுதியில் யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்