பாரதியார் தமிழ் இலக்கிய மன்ற தீந்தமிழ் கருத்தரங்கம்

மன்னார்குடி, ஆக. 31: பாரதியார் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் தீந்தமிழ்க் கருத்தரங்கு தலைமையாசிரியர் இராசசேகரன் தலைமையில் மன்னார்குடி கூட்டுறவு அர்பன் பேங்க் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராசுப்பிள்ளை, நகர் மன்ற உறுப்பினர் தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இலக்கிய மன்றச் செயலாளர் ராசகணேசன் செய்திருந்தார். இதில், அரசு உதவி பெறும் பின்லே மேல்நிலைப்பள்ளியின் கணினி ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கணினித் தமிழ்க் கலைச்சொல்லாக்கம் எனும் தலைப்பில் பேசுகையில், தகவல் தொழில் நுட்ப யுகத்தில் கணினித்திறன் என்பது 65 வது கலையாக மாறி விட்டது. தமிழ் ஒருங் குறி உருவாக்கம், இணையப் பயன்பாட்டில் தமிழ் மொழி பிற மொழிகளுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் மென்பொருள் உருவாக்கத்தில் எதிர் காலத்தில் நிறைய வேலை வாய்ப்புகள் மாணவர்களுக்குக் காத்திருக்கிறது என்றார். முடிவில், பட்டதாரித் தமிழாசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

Related posts

(வேலூர்) 9ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பலி வேலூர் அருகே சோகம்

(வேலூர்) 450 கிலோ வெல்லம் பதுக்கிய 2 பேர் கைது பேரணாம்பட்டில் போலீஸ் அதிரடி சாராய வியாபாரிகளுக்கு விற்க

பிளஸ் 1 மாணவிக்கு குழந்தை பிறந்தது 2 மகள்களின் தந்தை போக்சோவில் கைது கே.வி.குப்பம் அருகே