பாட்டக்கரை ஆலயத்தில் விபிஎஸ் வகுப்பு நிறைவு

நாசரேத், மே 16: பாட்டக்கரை ஆலயத்தில் நடந்துவந்த விபிஎஸ் வகுப்புகள் நிறைவு பெற்றன. தென்னிந்திய திருச்சபையின் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்திற்கு உட்பட்ட நாசரேத் அடுத்த பாட்டக்கரை தூய இமானுவேல் ஆலயத்தில் விபிஎஸ் வகுப்புகள் 10 நாட்கள் நடந்து வந்தன. இதன் நிறைவு விழாவை சேகர தலைவர் ஜெபாஸ் ரஞ்சித் தனராஜ் ஜெபித்து துவக்கிவைத்தார். அக்சாள், சங்கீதா ஆகியோர் விபிஎஸ் இயக்குநர்களாக செயல்பட்டனர். இதையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதையடுத்து மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இதில் திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சேகர தலைவர் ஜெபாஸ், சபை ஊழியர் கிறிஸ்டோபர், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஜெபசிங், ஆலய பணியாளர் ஜான் தங்கத்துரை மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு