பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமார் நாளை நேரில் ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்..!!

சென்னை: பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமார் நாளை நேரில் ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சமூக வலைத்தளத்தில் தமிழக அரசு பற்றி அவதூறாக பதிவிட்டதாக நிர்மல்குமார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. மாநில அரசு பிரதமரின் வருகையின் போது பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித உறுதிமொழியும் கொடுக்காத காரணத்தினால் இந்த வருடம் பிரதமர் வருவது தள்ளிப்போனதாக தகவல் என பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி பசும்பொன் வருவதாகவும், தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்றும் நிர்மல்குமார் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் கலகம் செய்ய தூண்டுதல், பொது அமைதிக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல், வதந்தி பரப்புதல் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. தேவர் ஜெயந்தி விழா நாளில் பிரதமர் மோடி பசும்பொன்னுக்கு வரவிருந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக காவல் துறைதான் காரணம் பாஜக பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. …

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்