பஸ்கள், லாரி அடுத்தடுத்து மோதல்

 

ஓசூர்: ஓசூர் பஸ் நிலையம் அருகில், ஓசூரில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் இறங்கும் இடத்தில் நேற்று அதிகாலை சுமார் 5மணியளவில், தனியார் ஆம்னி பஸ் ஒன்று பயணிகளை இறக்கி விடுவதற்காக நின்றது. அப்போது, அதன் மீது பின்னால் வந்த அரசு பஸ் மோதியது.

தொடர்ந்து அவ்வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று அரசு பஸ் மீது மோதியது. இதில், பஸ்கள் மற்றும் லாரியின் முன்பக்கம் நொறுங்கியது. பஸ், லாரியில் இருந்தவர்கள் காயங்களின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த, ஓசூர் போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்டனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related posts

(வேலூர்) 9ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பலி வேலூர் அருகே சோகம்

(வேலூர்) 450 கிலோ வெல்லம் பதுக்கிய 2 பேர் கைது பேரணாம்பட்டில் போலீஸ் அதிரடி சாராய வியாபாரிகளுக்கு விற்க

பிளஸ் 1 மாணவிக்கு குழந்தை பிறந்தது 2 மகள்களின் தந்தை போக்சோவில் கைது கே.வி.குப்பம் அருகே