பவுர்ணமியையொட்டி சத்யநாராயண பூஜை

மதுராந்தகம்: பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, கருங்குழி ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் சத்யநாராயண பூஜை நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் நேற்று வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை சித்தர் ரகோத்தம சுவாமிகள் பக்தர்களுக்கு நல்லாசி வழங்கினார். தொடர்ந்து, காலை 11 மணிமுதல் 12 மணிவரை சேஷபீடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த சித்தருக்கு, பக்தர்கள் ஓம் நமசிவாய மந்திர உச்சாடனையுடன் அபிஷேகம் செய்தனர். பின்னர், மக்கள் சுபிஷமுடன் வாழ ஞானலிங்கத்துக்கு பூஜை செய்து, ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் யாகம் வளர்த்து, சத்தியநாரயண பூஜை நடத்தி, மகாதீப ஆராதனையை சித்தர் பக்தர்களுக்கு காண்பித்தார். விழாவில் கருங்குழி, செங்கல்பட்டு, சென்னை, புதுசேரி, கடலூர், விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்….

Related posts

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு

நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!!