பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி

 

பவானி, ஏப். 24: பவானி அருகே ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதியதில் பலத்த காயமடைந்த கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு அருகே உள்ள மாயவரத்தைச் சேர்ந்தவர் நல்லசாமி மகன் ராஜேஷ் (23). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு அந்தியூர்- பவானி ரோட்டில் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

தொட்டிபாளையம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே சென்றபோது சேலத்தில் இருந்து அந்தியூர் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ராஜேஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  ஸ்கூட்டர் மீது மோதிய அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கியது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். விபத்து குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை