பழூரில் ஆண்டேரியை தூர்வாரி டுப்பு சுவர் அமைக்க வேண்டும்

தா.பழூர்,செப்.1: தா.பழூரில் ஆண்டேரியை தூர்வாரி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ளது மிகவும் பழமை வாய்ந்த ஏரியான ஆண்டேரி. இந்த ஏரி சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் உள்ள நீரை வைத்து அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், அத்தியாவசிய தேவைகளுக்காகவும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் காலப்போக்கில் ஏரியில் சுகாதாரமின்மை காரணத்தினால் குளிப்பதற்கும், கால்நடைகளுக்கும் பயன்படுத்தி வந்தது குறைந்தது. இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குடிமராமத்து பணி செய்யும் போது மழை துவங்கியதால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் ஏரியை சுற்றி கருவேல மரங்களும், முள் புதர்களும் நிறைந்து கரைகள் பலவீனம் அடைந்த நிலையில் காணப்பட்டது. நாளடைவில் ஏரியின் உள்புறங்களில் அல்லி, தாமரை, சம்பு, கோரை உள்ளிட்டவை பெரிய அளவில் கொத்து கொத்துக்களாக முளைத்து ஏரியை சூழ்ந்ததால் ஏரியில் உள்ள நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் இதில் குளிக்கும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றது. தற்பொழுது மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் இந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ள அல்லி, தாமரை, சம்பு, கோரை உள்ளிட்டவர்களை அகற்றி ஏரியை தூர்வாரி, கரையை பலப்படுத்தி வடிகால் வசதிகளை ஏற்படுத்தி வைப்பது மூலம் தா.பழூர் பகுதி மக்கள் மட்டும் இன்றி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களும் பயன்பெறும் வகையிலும் கால்நடைகள் பயன்பாட்டிற்கும் இது உதவும். மேலும் இதனை ஆழப்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். ஆகையால் மாவட்ட நிர்வாகம் ஏரியை ஆக்கிரமித்துள்ள மரங்கள், அல்லி, தாமரை, சம்பு, கோரை உள்ளிட்டவர்களை அகற்றி தூர்வாரி கரையை பலப்படுத்தி, தடுப்புச் சுவர் மற்றும் படித்துரை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்