பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து அப்பளம்போல் நொறுங்கிய லாரியில் சிக்கிய டிரைவர்

திருக்கோவிலூர், பிப். 3: திருக்கோவிலூர் அருகே பழுதாகி நின்ற லாரியின் மீது மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த ராஜா மகன் அஜித்குமார்(29). லாரி டிரைவர். இவர் நேற்றுமுன்தினம் டாரஸ் லாரியில் திருக்கோவிலூர் அடுத்த பைபாஸ் சாலை பகுதியில் இருந்து கிரானைட் கற்கள் ஏற்றிக்கொண்டு திருவாரூர் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு திருக்கோவிலூர் புறவழி சாலையில் உள்ள அய்யனார் கோவில் அருகே சென்றபோது டாரஸ் லாரி பழுதாகி நின்றது. இதையடுத்து மெக்கானிக்கை அழைத்து வருவதற்காக அஜித்குமார் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு லாரி, பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் அந்த லாரி அப்பளம் போல் நொறுங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அப்பளம்போல் நொறுங்கிய லாரியில் சிக்கியிருந்த டிரைவர் திருவண்ணாமலை வேங்கி கால் பகுதியை சேர்ந்த பாலாஜியை (48) மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை