பழநி வழித்தடத்தில் திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்: ரயில் உபயோகிப்போர் சங்கம் கோரிக்கை

 

பழநி, மே 24: பழநி வழித்தடத்தில் திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டுமென ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி ரயில் உபயோகிப்போர் நலச்சங்கத்தின் சார்பில் ரயில்வே அமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, கூட்டத்தில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பழநி-புதுதாராபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். மதுரையில் இருந்து பழநி, பொள்ளாச்சி, கோவை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்.

திருவனந்தபுரம்-மதுரை செல்லும் அமிர்தா ரயிலை போடி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். சென்னைக்கு பகல் நேரத்தில் செல்லும் வகையில் கோவை, பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல் வழித்தடத்தில் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து எழும்பூருக்கு திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை வழித்தடத்தில் புதிய ரயில் இயக்க வேண்டும். பழநியில் வழித்தடத்தில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, பெங்களூரு, கொச்சின் ஆகிய ஊர்களுக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்