பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை இன்று துவங்குகிறது

 

பழநி, ஜூலை 17: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் இன்று முதல் ஆடி லட்சார்ச்சனை துவங்க உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் நிர்வாகத்தின் கீழ் கிழக்கு ரத வீதியில் பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாதம் லட்சார்ச்சனை பூஜை நடைபெறும். இந்த ஆண்டு இன்று முதல் லட்ச்சார்ச்சனை துவங்க உள்ளது. ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி வரை சாயரட்சை பூஜை முடிந்தவுடன் லட்சார்ச்சனை பூஜை நடைபெறும். நாளொன்றிற்கு 4 ஆயிரம் அர்ச்சனைகள் வீதம் 1 லட்சம் அர்ச்சனைகள் செய்யப்படும்.

தொடர்ந்து ஆகஸ்ட் 10ம் தேதி ஆடிலட்ச்சார்ச்சனை புரஸ்சரண ஹோமம் நடைபெறும். தொடர்ந்து 11ம் தேதி பெரியநாயகி அம்மனுக்கு மகா அபிஷேமும், அன்றைய தினம் ரத வீதிகளில் இரவு 8.30 மணிக்கு வெள்ளித்தேர் உலாவும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை