பழநி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

 

பழநி, ஆக. 19:பழநி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், மால்கள் மற்றும் பலசரக்கு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் இட்லி மாவு, சந்தகை, சப்பாத்தி, காளான் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் சப்பாத்தி போன்றவற்றில் தயாரிப்பு தேதி என அதனை வாங்கும் தேதிக்கு அடுத்த நாளை குறிப்பிடப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.

இப்புகாரின் அடிப்படையில் பழநி பகுதியில் உள்ள கடைகள், மால்களில் வட்டார உணவுப்பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்விற்கு அனுப்பப்பட்டன. மேலும், பாக்கெட் உணவுகள் வாங்கும்போது தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகளை கவனித்து வாங்க வேண்டும். உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்தனர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை