பள்ளி மாணவிக்கு சிஇஓ பாராட்டு

தர்மபுரி, மார்ச் 12: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, தர்மபுரியில் மாவட்ட அளவிலான அறிவியல் வினாடி-வினா போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் கலந்துகொண்ட ஏரியூர் அடுத்த சிடுவம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி நேத்ரா முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மான்விழி ஆகியோர் பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி