பள்ளிகள் திறப்பதற்கு முன்ேப வரும் கல்வி ஆண்டிற்காக விவசாயிகள் தங்களது வயல்களில் கோடை உழவு பணியை மேற்கொள்ளலாம்

திருவாரூர், ஏப். 27: திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது வயல்களில் கோடை உழவு பணிகளை மேற்கொள்ளுமாறு வேளாண்மை இணை இயக்குனர் ஏழுமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாருர் மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது வயல்களில் கோடை உழவு மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். பூமி வெப்பமாக இருப்பதால் கோடையில் மேல் மண் அதிக வெப்பமடைகிறது. இதனால் கோடை உழவு மேற்கொள்வது நிலத்தில் உள்ள ஈரம் ஆவியாகவிடாமல் புழுதிப்படலம் தடுத்து விடும். கோடை மழையின் ஈரத்தை பயன்படுத்தி நிலத்தை நன்கு உழவு செய்தால் மேல் மண் துகள்களாகி நிலத்தில் நீர் பெருகும் திறன் அதிகரிக்கும். மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைப்பதனால் நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் பெருகும்.

வயலிலுள்ள கோரை போன்ற களைகள் மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டு சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் கோடை உழவு செய்வது மிகவும் முக்கிய தொழில் நுட்பமாகும். நிலத்தின் அடியில் உள்ள வண்டு புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் வெளியில் கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுகிறது. மிக முக்கியமாக வேர் புழுக்கல் கட்டுப்படுத்தப்படுகிறது. பூச்சி நோய் தாக்குதல் பெருமளவவு குறையும். வயல் வெளிகளில் பெய்யும் மழை நீரை சேமிப்பதில் கோடை உழவு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இந்த கோடை உழவினை செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு இணை இயக்குனர் ஏழுமலை தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்