பள்ளப்பட்டி 11வது வார்டில் கழிவுநீர் தேக்கத்தால் பெருகும் கொசுக்கள்-நோய் பரவும் அபாயம்

திண்டுக்கல் : திண்டுக்கல்  பள்ளப்பட்டி ஊராட்சி 11வது வார்டில் உள்ள அந்தோணியார் கோயில் தெருவில்  300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில்  கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக கழிவுநீர் ஓடைகள் தூர்வாராமல் கிடக்கிறது. இதனால் இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார  சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவுநீர் தேக்கத்தால் கொசுக்கள் பெருகி  தொற்று ேநாய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் ஆத்தூர் அணை  மற்றும் காவிரி கூட்டுக்குடிநீர் விநியோகம் முறையாக இல்லை. இதனால்  இப்பகுதி மக்கள் ஒரு குடம் குடிநீர் ரூ.15 முதல் ரூ.25 வரை விலை கொடுத்து  வாங்கும் அவலநிலையில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர்  கால்வாய்களை தூர்வாரவும், குடிநீர் முறையாக விநியோகம் செய்யவும் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் சிறப்பு கல்வி, தசைப்பயிற்சி: பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்

குவைத் தீ விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு