பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

 

பந்தலூர், ஏப், 15: பந்தலூர் பஜாரில் அம்பேத்கர் 134வது பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் அம்பேத்கர் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. பந்தலூர் அருகே மேங்கோரஞ் பகுதியில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்ட மேதை அம்பேத்கர் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து மேங்கொரஞ் பகுதியில் பணியாற்றும் கணேசன் என்பவருக்கு அவரின் சிறந்த பணி சேவையை பாராட்டி அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் அம்பேத்கர் மக்கள் இயக்க நகரச் செயலாளர் இந்திரஜித் தலைமையில் மாவட்டச் செயலாளர் முருகவேல் முன்னிலையில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் சிறந்த தூய்மை பணியாளர் விருது வழங்கினார். நிகழ்ச்சியில் அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பந்தலூர் பஜாரில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் அம்பேத்கரின் 134 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு அம்பேத்கர் மக்கள் இயக்க நகரச் செயலாளர் இந்திரஜித் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் முருகவேல், பந்தலூர் வழக்கறிஞர் சிவசுப்பிரமணியம், தொழிற்சங்கத் தலைவர் மாடசாமி, வியாபார சங்கத் தலைவர் அசரப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு