பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

 

கோவை, மார்ச் 24: நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி சிட்டி உயர்நிலை பள்ளி மற்றும் கோவை ஜவுளி வியாபாரிகள் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவை மாநகராட்சி சிட்டி உயர்நிலை பள்ளி மற்றும் கோவை ஜவுளி வியாபாரிகள் சங்க அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய பதட்டமான வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்குப்பதிவின்போது தேவையான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும், குடிநீர், மின்சாரம், வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு சாய்வு தளவசதி ஏற்படுத்தவும் கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், கணபதி சிஎம்எஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, கணபதி பகுதியில் வாகன தணிக்கை நடைபெறுவதை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாநகராட்சி துணை கமிஷனர் செல்வசுரபி, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு

ராஜபாளையத்தில் பலத்த காற்று மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்

சட்ட விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்