பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற உள்ள நுண்பார்வையாளர்களுக்கு முதற்கட்ட பணி ஒதுக்கீடு

மயிலாடுதுறை, ஏப்.14:மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதள மென்பொருள் செயலி வழியாக சட்டமன்ற தொகுதி வாரியாக முதற்கட்ட பணி ஒதுக்கீடு செய்யும் முறை மாவட்ட கலெக்டர் தேர்தல் நடத்தும் அலுவலர் மகாபாரதி தலைமையில், தேர்தல் பார்வையாளர் (பொது) கன்ஹீராஜ்ஹச் பகதே., முன்னிலையில் நடைபெற்றது. பின்னர், மாவட்டகலெக்டர் தெரிவித்ததாவது: மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம்தேதி நடைபெறுகிறது. மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 1743 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 89 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள், காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

இப்பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளராக பணியாற்றுவதற்கு மத்திய அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 50 பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்கு 62 நுண் பார்வையாளர்களுக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் ஆணையத்தின் இணையதள மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நுண்பார்வையாளர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து தேர்தல் அலுவலகத்திற்கு அறிக்கையாக தகவல்களை வழங்குவார்கள் என தெரிவித்தார்.

இல்லத்திற்கு அழகு சேர்க்கும் ஆர்.பி.ஆர் நிலைக்கதவுகள் மனிதர்களாக பிறந்த அனைவரது அத்தியாவாசிய தேவை உன்னஉணவு உடுக்க உடைஇருக்க இருப்பிடம்,உண்ண உணவையும்,உடுக்க உடையும், வேலைக்குசென்று சம்பாதிக்கும் தனதுபணத்தில் ஒவ்வொருவரும் நிறைவேற்றிக்கொள்கிறார்கள். ஆனால் வசிப்பதற்குஒரு வீடு அமைவது என்பதுஅனைவருக்கும் அரிதாக உள்ளது. லட்சம் லட்சமாக வியாபாரம் செய்வர்.அரசு பதவியில்இருந்து கைநிறைய சம்பளம்வாங்குவார். ஆனால் அவர்களுக்கு என சொந்த வீடு இருக்காது, சிறிய அளவிலாவது ஒருவீட்டை நமக்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறுநாம் பார்த்து கட்டப்படும்கனவு இல்லத்திற்கு மேலும்அழகு சேர்ப்பது மரத்தினாலான நிலைகள், கதவுகள் தான், வீட்டின் கதவை வடிவமைப்பதில் மிகுந்த அக்கறைகொள்ளப்படுவது உண்டு.

கோயில் கட்டிடக்கலைக்கு நிகரான வேலைபாடுகளுடன் கதவுகள் வடிவமைக்கப்படுகிறது. கதவுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் அடிப்படையிலும் கதவுகள் வகைபடுத்துகின்றன.வீடு கட்டும்போது செலவைக் குறைப்பது மிக முக்கியமாகும். சிலர் ஜன்னல்கள், கதவுகள் செய்ய நிறைய செலவு செய்து பின்னர் அவதிப்படுவர். கதவு ஜன்னல் வாங்குவதில் கூடநாம் செலயை மிச்சப்படுத்தலாம். இவ்வாறு குறைவான விலையில் நிறைவான கதவு கள் வாங்க சிறந்த நிறுவனம்.ஆர்.பி.ஆர்.ஆகும்.

இங்கு புதிய மரத்தில் இயந்திரங்களைக் கொண்டு புதுப்புது டிசைன்களில் அவர்களின்சொந்த தயாரிப்பில் செய்யப்படுவதால் விலையில் மிகக்குறைவாகவும் தரத்தில் மிக நிறைவாகவும் கொடுக்க முடிகிறது நூற்றுக்கும் மேற்பட்டமாடல்களில் பூ வேலைபாடுகளுடன் கூடிய கதவுகள், கிரில்கிளாஸ் பொருத்திய ஜன்னல்கள் அனைத்து விதமாகமெம்மரின் டோர், உட்டோர் என எல்லா அளவுகளிலும் வாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணங்களில்உடனே வாங்க சிறந்த நிறுவனம் அகும் வாடிக்கையானர்கள் விரும்பும் வகையில் அனைத்து அளவுகளிலும்தயார் நிலையில் உள்ளன.

ஆதலால் எங்கள் நிறுவனத்திற்கு வாங்க உடனே, நீங்கள்விரும்பும் கதவுகளை வாங்கிச்செல்லுங்கள் அலைச்சலும்,நேரமும் மிச்சமாகும் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்.ஆர்.நகர்(ஸ்டேட் பேங்க் எதிரில் மற்றும்திருத்துறைப்பூண்டியில் வி.சி. ஆர் ரோட்டில் வேதாரண்யம்பைபாசிலும்) வேதாரண்யம்யானைக்கட்டித் தெரு மற்றும் கருப்பம்புலத்தில் வடகாடு பகுதியில் சிவன் கோயில்தெருவிலும் இந்தநிறுவனம் செயல்பட்டுவருகின்றன. எனவே வீடு கட்டுபவர்கள் இந்த நிறுவனத்தில் தங்களுக்கு தேவையான கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றை வாங்கி இல்லத்தை மேலும் அழகுபடுத்தலாம் என்கின்றார் இந்நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.பி.ஆர். விஜயராகவன். தேர்தல் நடத்தும் அலுவலர், பார்வையாளர் முன்னிலையில் நடந்தது

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை