பண்டாரவிளையில் சண்முகநாதனுடன் விவசாய சங்க தலைவர் சந்திப்பு

ஏரல், நவ. 25: தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதனை பண்டாரவிளையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று காலை தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாய சங்க மாநில தலைவர் ராஜேஷ் உழவர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர், மஞ்சள் கொன்றை என்ற மரக்கன்றை சண்முகநாதனுக்கு பரிசாக வழங்கினார். அப்போது விவசாய சங்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகன், கிருஷ்ணகுமார், வினித், இசக்கிபாண்டியன், அதிமுக வைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், பெருங்குளம் வார்டு செயலாளர் ஜெயமுருகன் மற்றும் சோலை செல்வம், தேவாரம், பண்டாரவிளை பால்துரை உட்பட பலர் உடனிருந்தனர்.

Related posts

லால்குடி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆதார் பதிவு

திருச்சி அருகே விபத்து கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதி 8 பேர் படுகாயம்

காயங்களுடன் பெண் மீட்பு