பட்டா வழங்கியதில் முறைகேடு தனி தாசில்தார், ஆர்ஐ சஸ்பெண்ட்

நாமக்கல் :நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக தனி தாசில்தாராக பாஸ்கர், வருவாய் ஆய்வாளராக கருணாகரன் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் ஏற்கனவே வழங்கிய பட்டாக்களை பெயர் மாற்றம் செய்து, அதே இடத்தில் வேறு நபருக்கு பட்டா வழங்கியதாக, கலெக்டர் ஸ்ரேயா சிங்கிற்கு புகார் வந்தது. இதுகுறித்து கலெக்டர், நேரில் ஆய்வு செய்தார். அப்போது அலுவலகத்தில் முறையாக ஆவணங்கள் பராமரிக்கவில்லை. இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதிலும், பட்டா மாறுதல் செய்ததிலும் விதிமீறல்கள் இருப்பதை கலெக்டர் கண்டுபிடித்தார்.நிலமற்ற ஏழைகளுக்கு, இ-பட்டா முறையில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பட்டா வழங்கப்படுகிறது. அதை பின்பற்றாமல், தனி தாசில்தார் விதிமுறைகளை மீறி முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் கருணாகரன் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்….

Related posts

கல்லூரி மாணவன் ஏரியில் மூழ்கி பலி

கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த விவசாயி

செம்மஞ்சேரியில் அமைக்கப்பட உள்ள மெகா விளையாட்டு நகரத்திற்கு சி.எம்.டி.ஏ டெண்டர் கோரியது