பட்டாம்பி அருகே பர்னீச்சர் தொழிற்சாலையில் தீ விபத்து

 

பாலக்காடு,ஏப்.16: பட்டாம்பி அருகே கும்பிடி – ஆனைக்கரை சாலையில் சிவசங்கரன் என்பவருக்கு சொந்தமான பர்னீச்சர் தொழிற்சாலை உள்ளது. இவரது தொழிற்சாலையில் அருகில் முகமது என்பவரது மரப்பேட்டையும் உள்ளது. நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பர்னீச்சர் தொழிற்சாலையில் கரும்புகை வெளியே வந்துள்ளது. தொடர்ந்து தீப்பற்றியதால் பர்னீச்சர்கள் அனைத்துமே தீப்பற்றி எரிந்துள்ளன.
தீ விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவலளித்தனர்.

பட்டாம்பி, பொன்னாணி, குன்னம்குளம் ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பலமணிநேரம் போராடி தீயணைத்தனர். மரப்பேட்டையிலும், பர்னீச்சர் தொழிற்சாலையிலுமாக சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. தீயணைப்பு படையின் விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்துள்ளது என முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு