பட்டப்பகலில் தொழிலாளியின் வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

 

கள்ளக்குறிச்சி, பிப். 2 : கள்ளக்குறிச்சி அருகில் உள்ள பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி(54) மற்றும் இவரது மனைவி ஜோதி ஆகிய இருவரும் கரும்பு வெட்டும் பணிக்கு நேற்று காலையில் சென்றுள்ளனர். அதனையடுத்து இவர்களது மகள் கவிதா வீட்டை பூட்டிவிட்டு கள்ளக்குறிச்சிக்கு சென்றுள்ளார். பின்னர் மதியம் சுமார் 12.30 மணியளவில் வீட்டிற்கு கவிதா வந்துள்ளார்.

அப்போது வீட்டின் முன்புற பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார் அதனையடுத்து முத்துசாமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த மூன்று பவுன் நகை மற்றும் மூன்று ஜோடி வெள்ளி கொலுசு, ரூ.5000 பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.60 லட்சம் ஆகும். இதுகுறித்து முத்துசாமி கள்ளக்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்