பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வில் 1,352 பேர் பங்கேற்பு

 

கோவை, பிப். 5:தமிழகத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு நேற்று நடந்தது.

மொத்தம் 2,222 இடங்களை நிரப்ப 130 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், கோவை மாவட்டத்தில் ராஜவீதி துணி வணிகர் சங்க மேல்நிலைப்பள்ளி, புனித காணிக்கை மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 5 மையங்களில் தேர்வு நடந்தது. இத்தேர்வை 1,407 பேர் எழுத இருந்தனர். இந்நிலையில், நேற்று நடந்த தேர்வினை 1,352 பேர் எழுதினர். 55 பேர் எழுதவில்லை. தேர்வுக்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்