பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து 16 பேர் காயம் சேத்துப்பட்டு அருகே விபத்து வேலூரில் இருந்து மேல்மலையனூர் கோயிலுக்கு

சேத்துப்பட்டு, ஜன.18: வேலூரில் இருந்து மேல்மலையனூர் கோயிலுக்கு பக்தர்கள் சென்ற வேன் சேத்துப்பட்டு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் அடுத்த சதுப்பேரியில் இருந்து மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு பக்தர்கள் நேற்று ேவனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேன் சேத்துப்பட்டு- ஆரணி சாலையில் செம்மாம்பாடி அருகே வந்தபோது, அவ்வழியாக சென்ற ஒருவர் சாலையை கடந்துள்ளார். அவர் மீது மோதாமல் இருக்க வேன் டிரைவர் திடீர் பிரேக் பிடித்துள்ளார். இதில் வேன் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த சுதாகர்(57), சதீஷ்(40), அபி(16), சுபலட்சுமி(58), ரீட்டா(37), சுகன்யா(34), வெங்கடேசன்(43), மனோகர்(12), ஜோதி(60), சூரியகலா(52), மணி(66), மற்றொரு ஜோதி(39), அமுதா(56), லித்திகா(8), சங்கர்(57), ராதா(30) ஆகிய 16 பேர் காயமடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அமுதா, சுதாகர் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ைவக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பல்வேறு வழக்குகளில் தொடர்பு: நீதிமன்றத்தில் வாலிபர் சரண்

தூத்துக்குடி உப்பளத்தில்மின்மோட்டார் திருட்டு

சி.வ.அரசு பள்ளியில் ₹2 கோடியில் புதிய வகுப்பறை கட்டுமான பணிகள் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு