நூறாவது பிறந்தநாளை யொட்டி தூத்துக்குடியில் கலைஞர் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மரியாதை

தூத்துக்குடி, ஜூன் 4: துத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் முதல்வர் கலைஞரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அலுவலகம் முன்பு அமைந்துள்ள அவரது சிலைக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் மேயர் ஜெகன்பெரியசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ரயில் விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதில், மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன்செல்வின், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மகளிர் அணி கஸ்தூரிதங்கம், இளைஞர் அணி மதியழகன், பிரதீப், தொண்டரணி ராமர், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், சுற்றுச்சுழல் அணி ஜெபசிங், மாநகர துணைச் செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், துணை அமைப்பாளர் சுபேந்திரன்,மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது, பகுதிசெயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், சக்திவேல், சுரேஷ், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த் கேப்ரியேல்ராஜ், துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், அருண்சுந்தர், ரவி,வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி,மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், தகவல் தொழில்நுட்ப அணி சுரேஷ்குமார் , கவுன்சிலர்கள் இசக்கிராஜா, ரிக்டா, சரவணக்குமார், வைதேகி, சரண்யா, சுப்புலட்சுமி,சுதா ஜெயசீலி, மரியகீதா, விஜயலெட்சுமி, ரெக்சிலின், முன்னாள் கவுன்சிலர் இரவீந்திரன், தொமுச செயலாளர் மரியதாஸ், வட்ட செயலாளர்கள் கதிரேசன், ராஜாமணி, பாலு ,வட்ட பிரதிநிதி பாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்