நூடுல்ஸ் சாப்பிட்டதால் இறந்த சிறுவனின் உடலில் காயங்கள்: பெற்றோரிடம் விசாரணை

திருச்சி: திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி மருதமுத்து நகரை சேர்ந்தவர்கள் சேகர்-மகாலட்சுமி தம்பதி. இவர்களது மகன் சாய்தருண்(2). சில நாட்களுக்கு முன்பு ஒவ்வாமையால் சாய்தருண் பாதிக்கப்பட்டு, உடலில் ஒருவிதமான புண் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். இந்நிலையில் கடந்த 17ம் தேதி இரவு மகாலட்சுமி சாய் தருணுக்கு நூடுல்ஸ் சமைத்து கொடுத்துவிட்டு, மீதமிருந்த நூடுல்சை குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார். மறுநாள் காலை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த நூடுல்சை மகாலட்சுமி சாய்தருணுக்கு சாப்பிட எடுத்து கொடுத்துள்ளார். இதனால் மதியம் வரை வேறு உணவையும் சாப்பிடாமல் உடல் சோர்வாக காணப்பட்ட சாய்தருண் திடீரென வாந்தி எடுத்து, சுருண்டு விழுந்து இறந்தான். இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை முடிந்த பின், சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையின்போது சிறுவனின் உடலில் பல இடங்களில் காயங்கள் மற்றும் உள்காயங்களும், விலா எலும்பில் முறிவு இருந்ததாகவும் டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.இதனையடுத்து லால்குடி டிஎஸ்பி சீதாராமன் தலைமையிலான போலீசார் சாய்தருணின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், சாய்தருண் அடிக்கடி கீழே விழுவான். இதில் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சாய்தருணுக்கு அக்கி என்று சொல்லக்கூடிய வைரஸ் தொற்று ஏற்பட்டு உடலில் பரவி உடல்நலம் குன்றியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சாய்தருணின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னரே அவன் இறந்ததற்கான காரணம் தெரியும் என்று போலீசார் தெரிவித்தனர்….

Related posts

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

பாஜ ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பது கேள்விகுறிதான்: திருமாவளவன் பேட்டி