நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலை விட வாக்கு எண்ணிக்கை அதிகரிப்பு

 

ஊட்டி, ஏப். 21: நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 28 ஆயிரத்து 252 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்த நிலையில், 70.93 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் ஊட்டி, குன்னூர், கூடலூர், பவானிசாகர், மேட்டுப்பாளையம் மற்றும் அவிநாசி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

இதில், 14 லட்சத்து 28 ஆயிரத்து 252 வாக்காளர்கள் இடம் பெறிருந்தனர். 6 தொகுதியிலும் மொத்தம் 809 இடங்களில் 1,619 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் 18வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. வழக்கமாக நீலகிரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு மந்தமாக துவங்கும். ஆனால், நேற்று முன்தினம் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விறு விறுப்பாக துவங்கியது.

இதனால், இம்முறை வாக்குப்பதிவு எண்ணிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதில், பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் 76.08 சதவீதமும், ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 67.25 சதவீதமும், கூடலூர் சட்டமன்ற தொகுதியில் 67.05 சதவீதமும், குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 65.3 சதவீதமும், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 72.28 சதவீதமும், அவிநாசி தொகுதியில் 72.8 சதவீதம் என நீலகிரி தொகுதியில் 70.93 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

Related posts

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் தேசிய விழிப்புணர்வு கருத்தரங்கு

புதியம்புத்தூர் அருகே யூனியன் பள்ளியில் கோள்கள் திருவிழா

திருச்செந்தூரில் நடந்த ஜமாபந்தியில் உடன்குடியில் அடிப்படை வசதி நிறைவேற்ற வலியுறுத்தி மனு