நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை வடதமிழகம், தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, குமரி, புதுச்சேரி பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஜூலை 15 முதல் 17ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். நாளையும், நாளை மறுநாளும் கர்நாடகா, மத்திய, தெற்கு அரபிக் கடலில் பலத்த காற்று வீசக்கூடும். நாளை தமிழக கடலோரம், மத்திய அரபிக்கடல், தெற்கு வங்கக்கடல், ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி வீசக்கூடும். ஜூலை 15ல் கர்நாடகா, ஆந்திரா, மத்திய வங்கக்கடல், மத்திய அரபிக்கடலில் பலத்த சூறாவளி வீசக்கூடும். மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 16ல் கர்நாடக கடலோர பகுதிகள், மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். ஜூலை 17ல் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. …

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்