நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உண்ணாவிரதம் திமுகவினர் திரளாக பங்கேற்க அழைப்பு

விருதுநகர், ஆக. 20: விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு கூட்டறிக்கையில், கழக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி இன்று (ஆக.20) காலை 10 மணியளவில் விருதுநகர் கலைஞர் திடலில் (தேசபந்து மைதானம்) ஒன்றிய பாஜக அரசு மற்றும் தமிழக ஆளுநரை கண்டித்து உண்ணாவிரத அறப்போர் நடைபெற உள்ளது. உண்ணாவிரத அறப்போரில் விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணிகளின் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் பகுதி கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்