நிலக்கோட்டை ராமராஜபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

நிலக்கோட்டை, மார்ச் 14: நிலக்கோட்டையை அடுத்த வைகையாற்று படுகையான ராமராஜபுரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை காலம் துவங்கியுள்ளதால் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முன்கூட்டியே திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து, விவசாயிகளிடம் நெல்லை பெற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் இளம்பரிதி, ஒன்றிய துணை செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுமாறன், மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், நெல் கொள்முதல் நிலைய அலுவலர்கள் தாரணி, தேவி, சசிக்குமார் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது