நாற்றங்கால் நடவு பணிகள் தீவிரம் ஐஆர்டிடி கல்லூரி வளாகத்தில் 9.5 ஏக்கர் நிலத்தில் ஐடி பார்க்

 

ஈரோடு,ஜூலை 28: ஈரோடு அருகே சித்தோடு ஐஆர்டிடி கல்லூரி வளாகத்தில் 9.5 ஏக்கர் நிலத்தில் ஐடி பார்க் அமைக்கப்பட உள்ளது என அமைச்சர் சு. முத்துசாமி கூறினார். ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் மகளிர் முன்னேற்றத்திற்காக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற மக்கள் ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதன்பேரில், ஈரோடு மாநகரில் 2 புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த 2 புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுவிட்டால் மாநகரில் உள்ள போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். சாலை விரிவாக்கம், கழிவு நீர் ஓடைகள், தெரு விளக்கு போன்ற பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஈரோடு மாநகரில் 8 இடங்களில் புதிதாக ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது. தற்போது அந்த இடங்களில் தற்காலிக ரவுண்டானா அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. ஈரோடு அருகே சித்தோடு ஐஆர்டிடி கல்லூரி வளாகத்தில் 9.5 ஏக்கர் நிலத்தில் ஐடி பார்க் அமைக்கப்பட உள்ளது. இது ஈரோடு வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்