நாயகனைப்பிரியாள் கிராமத்தில் ஊட்டச்சத்து மாத விழா

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தில் ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது. இதில் தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 120 கிராமங்களில் இந்த ஊட்டச்சத்து மாத விழா 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக உதயநத்தம் பிரிவு நாயகனைப்பிரியாள் கிராமத்தில் நடைபெற்றது. விழாவுக்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவி தலைமை தாங்கினார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் புகழேந்தி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜாராம், பள்ளி தலைமை ஆசிரியர் சீதாலட்சுமி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் ஊட்டச்சத்து குறித்து காய்கறிகள், பழங்கள், கீரைகள், சிறுதானியங்கள் குறித்து கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் வளர் இளம் பெண்கள், ரத்தசோகை, ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதி மொழி எடுக்கப்பட்டது. மேலும் இதில் தேசிய ஊட்டச்சத்து நிறைந்த கல்வியில் சிறந்த வலிமையான பாரதம் உருவாக்குவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நாயகனைப்பிரியாள் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

2 நாள் அதிரடி வேட்டையில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 21 வாலிபர்கள் பிடிபட்டனர்

கலைஞர் பிறந்த நாளையொட்டி நடந்த ஆணழகன் போட்டியில் வென்றவருக்கு பரிசு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 22 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது