நானே வருவேன் படத்துக்கு யுஏ: செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாகிறது

சென்னை: தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள நானே வருவேன் படம் வரும் 30ம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்துக்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. நானே வருவேன் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்துஜா, எல்லி அவ்ர்ராம் ஹீரோயின்கள். பிரபு, யோகிபாபு, சரவண சுப்பையா உள்பட பலர் நடித்துள்ளனர். செல்வராகவன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.அண்ணன், தம்பி என இரு வேடங்களில் தனுஷ் நடித்திருக்கிறார். இதில் ஒரு தனுஷ், கொலையாளியாக நடித்துள்ளார். கர்நாடக காட்டு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த படத்துக்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. 2 மணி நேரம் 15 நிமிடங்கள் படம் ஓடுகிறது. வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாகிறது. இதே நாளில் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படமும் வெளியாகிறது. அந்த படம் 2 மணி 46 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உள்ளது. …

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்