நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பு அலுவலர் நியமனம்

 

கிருஷ்ணகிரி, மார்ச் 20: கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பு அலுவலராக விஷ்ணு பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி, மாவட்ட பொறுப்பு அலுவலராக, சென்னை வருமான வரித்துறை துணை இயக்குநர்(விசாரணை பிரிவு 4) விஷ்ணு பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். எனவே, கணக்கில் வராத அல்லது ஆவணங்கள் இல்லாமல் ₹10 லட்சத்திற்கு அதிகமான தனிநபர் ரொக்கம், தங்கம் அல்லது விலை உயர்ந்த பொருட்கள் ஏதேனும் அனுமதியின்றி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைக்குள் கொண்டு செல்லப்பட்டால் 1800 4256669 கட்டணமில்லா எண்ணிலும், 94453 94453 என்கிற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம். மேலும், tn.electioncomplaints@incometax.gov.in என்கிற மின்னஞ்சல் மூலமாகவும், மாவட்ட பொறுப்பு அலுவலருக்கு புகார் தெரிவிக்கலாம்.
இதேபோல், கிருஷ்ணகிரி வருமான வரித்துறையினருக்கும் புகார் அளிக்கலாம் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related posts

காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை

(வேலூர்) திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அபராதம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி பாலாற்றில் குப்பை கொட்டிய

1225 டன் யூரியா மணலியில் இருந்து காட்பாடிக்கு வருகை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு